Inhouse product
கட்டுரை ஆசான் தரம் - 9, தமிழாசான் இந்திரா பாரதி எழுத்துத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட பல சிறுவர் இலக்கியங்களின் சொந்தக்காரரும், தமிழ் மொழியினை பிரதான படமாகக் கற்பித்தும் வருபவர். தரம் 09 மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் எழுத்தாற்றலுக்கு உறுதியான அத்திவாரமிடும் நோக்கில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. கட்டுரைகள், சிறுகதைகள், சொற்பொழிவுகள், உரையாடல்கள், கடிதங்கள், அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்கள் என பாடத்திட்டத்தை உள்ளடக்கிய வகையில், கட்டுரை அமைப்பு, கட்டுரைக்கான குறிப்புகள், சொற் தேர்வு முறை, பந்தி பிரிப்பு முறை, கட்டுரை தொடங்கும் ஒழுங்கு, அதை முடித்து வைக்கும் முறை, கட்டுரையை கட்டி எழுப்புதல், அதனை மெருகூட்டுதல் போன்றவற்றிற்கான வழிகாட்டல்களுடன் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் மாணவர்கள் சுயமாக பயன்படுத்த சிறந்த தெரிவு, ஆசிரியர்கள் பாட வழிகாட்டியாக பயன்படுத்துவதற்கும் இந்நூல் சிறந்த தெரிவு.